புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடி

""குளிக்கும்போது சோப்பை கீழே போட்டு குளிக்கிறியே ஏன்?''""நீங்கதானே சோப்பைப் போட்டு குளிக்கச் சொன்னீங்க?''

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

""குளிக்கும்போது சோப்பை கீழே போட்டு குளிக்கிறியே ஏன்?''
""நீங்கதானே சோப்பைப் போட்டு குளிக்கச் சொன்னீங்க?''

நா . ஆமினத்து ஜாக்ரினா,
கீழக்கரை.

""வெயிலுக்கு ஊட்டி, கொடைக்கானல் எங்கியாவது போகலாம்னு எங்க அப்பா சொல்லியிருக்காரு!''
""ரெண்டு ஊர்லேயுமே வெய்யில் இருக்காதேடா!''

வி . ரேவதி,
தஞ்சாவூர்.

""அமாவாசை அன்று நிலவு ஏன் தெரிவதில்லை?''
""அன்னிக்கு ரொம்ப இருட்டா இருக்கறதாலே தெரியறதில்லே சார்!''

ம . அக்ஷயா,
அரூர்.


""அக்கா என்ன பண்றாங்க?''
""காயிலேயிருந்து பூ பண்றாங்க??
""என்னடீ சொல்றே புரியவேயில்லே!''
""தேங்காய் திருவறாங்க!''

ஆர் . சுப்பு,
திருத்தங்கல்.

""இதெல்லாம் ரொம்ப முக்கிய கேள்விகள்!....''
""எப்படி சொல்றே?''
""பதில் எழுதத் தெரியாமல் நான் ரொம்ப முக்கிய கேள்விகள்!...''

எஸ் . வேல் அரவிந்த்,
திண்டுக்கல் - 624005.

 ""முண்டம்!... அறிவிருக்கா?.... முட்டாள்!''
""யாரைத் திட்டறே?''
""ஃபோனை!''
""எதுக்கு?''
""எங்கப்பா எங்கூட ஃபோன் பேசிட்டு, "சரி, நீ ஃபோன வைடா' ன்னு சொன்னாரு!''

மு . பெரியசாமி, 
திருத்துறைப்பூண்டி - 614715.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.