மரங்களின் வரங்கள்!: உலகின் பழமையான மரம் - செக்கோயா மரம்

நான்தான் செக்கோயா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் செக்கோயா செம்பெர்வைரன்ஸ் என்பதாகும். நான் கப்ரெஸ்சியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: உலகின் பழமையான மரம் - செக்கோயா மரம்
Updated on
2 min read

குழைந்தைகளே நலமா,

நான்தான் செக்கோயா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் செக்கோயா செம்பெர்வைரன்ஸ் என்பதாகும். நான் கப்ரெஸ்சியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு காலத்தில் ஜுராசிக் மற்றும் கிரிட்டாசியஸ் காலங்களில், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் எங்கும் இருந்தேன். குழந்தைகளே, உலகில் வாழும் மிகப் பெரிய உயிரினம் எதுவென்று கேட்டால் நீங்கள் நீலத்திமிங்கலம் என்று சொல்லிவிடுவீர்கள். ஆனால், அதைவிட மிகப் பெரிய மரமே, உலகில் வாழும் மிகப் பெரிய உயிரினம் என்று தாவரவியல் அறிஞர்கள் என்னைத்தான் சொல்றாங்க. பூமியிலேயே செக்கோயா மரங்கள் தான் மிகப் பெரிய உயிர் வகைகள். நான் கலிபோர்னியாவின் கடற்கரை, ஓரிகன் மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதியை தாயகமாகக் கொண்டவன்.

உலகில் உள்ள மிகப் பழமையான மரங்கள் நிறைந்தது கலிபோர்னியா மாகாணம். ஒரு காலத்தில் வடஅமெரிக்காவின் பல பகுதிகளில் நான் காணப்பட்டேன். இப்போது கலிபோர்னியாவில் சில பகுதிகளிலும், ஒரேகான் மலைப் பகுதிகளில் மட்டுமே இருக்கிறேன். இவற்றில் பல மரங்கள் கி.மு. 2 ஆயிரமாவது ஆண்டும் முன்பே தோன்றியவை என வரலாற்று ஆய்வாளர்கள் சொல்றாங்க. என் மறைவான வேர்கள் 3 முதல் 4 ஏக்கர் அளவுக்கு பரவியிருக்கும். ஆனால், குழந்தைகளே, என் விதை ஒரு குண்டூசி அளவுதான் இருக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க. அதற்கு சிறிய இறக்கைகள் கூட உண்டு.

கலிபோர்னியாவின் செக்கோயா போன்று கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கும் மரத்தின் மறைவான வேர்கள், பல ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும், பெருவெள்ளத்தின் போதும், கடும் புயற்காற்றின் போதும் பயங்கரமான பூமி அதிர்ச்சியின் போதும் அது அசையாது என நீதிமொழிகள் (12:3) தெரிவிக்கிறது. உயிருள்ளவற்றில் உலகத்தின் மிகப் பெரிய மற்றும் மிகப் பழமையானவையாக இருப்பது கலிபோர்னியாவின் செக்கோயா மரங்களாகும்.

வெறுமனே காற்றினாலும், தண்ணீராலும், சில தாதுப்பொருள்களுடனும் இறைவன் என்னை சிருஷ்டித்திருப்பது ஆச்சரியமாக இல்லையா? 90 மீட்டர் உயரத்திலிருக்கும் மிகப் பெரிய செக்கோயா மரம் பெரும்பாலும் காற்றினாலே உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு கார்பன்-டை-ஆக்சைட் மூலக்கூறும், தண்ணீர் மூலக்கூறும் மாறி, மாறி எண்ணற்ற கோடிக்கணக்கான ஒருங்கிணைப்பு பிரிவுகள் என அழைக்கப்படும் மிக நுண்ணிய பசுங்கணிகங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன என நீதிமொழிகளில் குறிப்பு இருக்கு குழந்தைகளே.

நான் 270 அடி ஏன் 350 அடி உயரம் கூட நீண்டு வளருவேன். கலிபோர்னியா பிக் மரங்களே அகலத்திலும் எடையிலும் பிரமாண்டமானவை. என் அடிமரத்தின் பட்டைகள் சில இடங்களில் 24 அடி அகலமாகக் கூட இருக்கும். எடை 2145 டன் வரை இருக்கும். நான் நிலத்திலிருந்து 100 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக வளருவேன். என் மரத்தின் அடிபாகத்தின் விட்டம் 100 மீட்டர் கூட இருக்கும். என் ஒரு மரத்திலிருந்து 500 கோடிக்கும் அதிகமான தீக்குச்சிகள் தயாரிக்கலாம்.

என் மரத்தை வைத்து ஆறு அறைகள் கொண்ட 50 வீடுகள் கூட கட்டலாம். என் மரப்பட்டை மட்டும் 60 செ.மீ. இதில் டேனின் அதிகமாக உள்ளது. இதிலிருந்து சாயம் தயாரிக்கலாம். இதனால் என்னை எந்த பூச்சிகளும் அண்டாது. நான் 2000 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகள் வரை கூட உயிர்வாழ்வேன்.

செக்கோயாவின் வேர்கள் பூமியின் ஊட்டமளிக்கும் மண்ணில் நாலாப் பக்கமும் விரிவாய்ப் பரவுவது போல், நம்முடைய மனமும், இதயமும் கடவுளுடைய வார்த்தைளுக்குள் விரிவாய்த் தோண்டிக் கொண்டு சென்று, அதன் அறிவளிக்கும் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ள வேண்டும். (நீதிமொழிகள்) நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com