கடி
By DIN | Published On : 21st August 2021 06:00 AM | Last Updated : 21st August 2021 06:00 AM | அ+அ அ- |

""என் பையன் படு சமத்து!''
""ஏன்?''
""ஆன் லைன் க்ளாஸூக்குக்கூட சாப்பாடு கட்டச் சொல்றானே!''
ஏ . மூர்த்தி,
புல்லரம்பாக்கம் - 602023
""ஆன் லைன் கிளாஸ்ல என்ன நன்மை?''
""அடி வாங்காமப் படிக்கலாம்!''
ந . பரத்,
கோவிலாம்பூண்டி - 608002.
""ஒண்ணாந்தேதி பிறந்தா போதும்!.... எங்கப்பா சம்பளத்திலே ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார்!''
""எனக்கு வாங்கித் தருவாரா?.... நான் ஒண்ணாந்தேதிதான் பிறந்தேன்!''
உமர்,
கடையநல்லூர் - 627751.
"" என்னடா இது ஏதோ பறக்குது?''
""நாம ஒழுங்கா படிக்கிறோமான்னு "ட்ரோன்' மூலமா அப்பா செக் பண்றாரு!''
கே . இந்து குமரேசன்,
விழுப்புரம் - 605602
இரண்டு மாடுகள் பேசிக்கொள்கின்றன
""அந்த ஒட்டகம் என்னை கடுமையா திட்டிட்டுப் போகுது...''
""ரொம்ப "திமில்' பிடிச்சதா இருக்கும் போலிருக்கு!''
கே . முத்தூஸ்,
தொண்டி.
""ஏய் ராமு, ரொம்ப நாளாச்சு! ஒரு போன் கூடக் காணோம்!
""என்னது?....போனைக் காணோமா?....கம்ப்ளெயின்ட் பண்ணியா?
கே . இந்து குமரப்பன்,
விழுப்புரம் - 605602