வள்ளலாரை போற்றுவோம்!
By -நம்பிக்கை நாகராஜன் | Published On : 21st August 2021 06:00 AM | Last Updated : 21st August 2021 06:00 AM | அ+அ அ- |

இராமலிங்க வள்ளலாரை
போற்றி வாழ்த்துக் கூறுவோம்! - அவர்
கூறும் நல்ல வழியில் சென்று
குறைகள் இன்றி வாழுவோம்!
உயிர்கள் போற்றும் உலகம் தன்னை
உணர்வில் நிறுத்தல் வேண்டுமே! - அவர்
உரைத்த சொல்லின் நன்மை தன்னை
உணர வேண்டும் நிச்சயம்!
வாடும் பயிரைக் கண்டபோது
வாடி நின்றார் கருணையில்!
வாழும் முறைகள் வகுத்துப் பாடி
வழிகள் நமக்குக் காட்டினார்!
கடை விரித்தேன் என்று சொல்லி
கருத்தை விரித்த சேதியை - நாம்
விடைகள் தெரிந்து விரைந்து நன்மை
விளையும் செயலில் சேருவோம்!
அருளில் பெருகும் சோதி என்று
அமைத்த வள்ளல் அடிகளை
தொழுது பெருகி ஓங்கும் கருணை
கொண்டு உயிர்கள் போற்றுவோம்!