சொல் ஜாலம்
By -ரொசிட்டா | Published On : 21st August 2021 06:00 AM | Last Updated : 21st August 2021 06:00 AM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் தமிழ் மாதங்கள் ஒன்றின் பெயர் கிடைக்கும். பக்கத்தைப் புரட்டாமலேயே கண்டுபிடித்து விடலாம்...
1. எந்த வேலைக்கும் புதிதாக வருபவர்களை இப்படி அழைப்பார்கள்...
2. இப்போது எந்த வேலையைச் செய்வதற்கும் தனித் தனியே இது வந்து விட்டது...
3. சென்னையின் மிகப் பிரபலமான இனிப்பு மிட்டாய்..
4. கூட்டமாக வந்தாலும் இந்தப் பெயர் கிடைக்கும்... ராணுவ வீரர் படைக்கும் இந்தப் பெயர் கிடைக்கும்.
5. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. புதுமுகம்,
2. எந்திரம்,
3. கமர்கட்,
4. பட்டாளம்,
5. சிலம்பம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : புரட்டாசி