விடுகதைகள்
By DIN | Published On : 04th December 2021 06:00 AM | Last Updated : 04th December 2021 06:00 AM | அ+அ அ- |

1.இவனைக் கொண்டு சரியென்றாலும் அழிக்கலாம், தவறு என்றாலும் அழிக்கலாம். யார் இவன்?
2.ஆட்டுவித்தால் ஆடுவான், ஆட்டாவிட்டால் தொங்கிக் கொண்டு கிடப்பான்...
3.மண்ணை வைத்து வீடு அமைப்பான், மரத்தை அரித்து உணவு சமைப்பான்....
4.சிதறிக் கிடக்குது அழகான புள்ளிகள், அதை வைத்துக் கோலம் போடத்தான் ஆளில்லை...
5.அழகிக்கு வரும் அதிசய வியாதி, பாதி நாள் குறைவாள், பாதி நாள் வளர்வாள்...
6.இந்தக் கோட்டையை ஆள அரசன் இல்லை. ஆனால் பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன் இருக்கிறார்கள்...
7.நீ பார்த்தால் இவனும் பார்ப்பான், நீ சிரித்தால் இவனும் சிரிப்பான், பைத்தியக்காரன் அல்ல...
8.கழற்றிப் போட்ட சட்டையை ஒருநாளும் மீண்டும் அணிய இவனுக்கு மனம் வராது...
விடைகள்
1. ரப்பர்
2. ஊஞ்சல்
3. கரையான்
4. நட்சத்திரக் கூட்டம்
5. நிலா
6. பரந்த வானம், சூரியன், சந்திரன்
7. முகம் பார்க்கும் கண்ணாடி
8. பாம்பு

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...