சொல் ஜாலம்
By -ரொசிட்டா | Published On : 04th December 2021 06:00 AM | Last Updated : 04th December 2021 06:00 AM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவரைக் குறிக்கும் சொல் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. ஒரு குழு அல்லது அமைப்பை இப்படியும் அழைப்பார்கள்.
2. முதல் தேதியானால் அப்பா கொண்டு வருவது...
3. அஞ்சாதவன், அசராதவன், திறமையானவன்...
4. கல்வித் தேவதை...
5. இப்படி இருந்தால், கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்க்கலாம்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. இயக்கம்
2. சம்பளம்
3. வல்லவன்
4. சரஸ்வதி
5. சிக்கனம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : இளவரசி
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...