அங்கிள் ஆன்டெனா

கரியமில வாயு (கார்பன்-டை ஆக்ûஸட்) உடலுக்கும் உலகுக்கும் கேடு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த வாயுவை எங்கேயாவது கொண்டு போய் நமக்குப் பாதிப்பு வராதவாறு செய்ய முடியாதா?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: கரியமில வாயு (கார்பன்-டை ஆக்ஸைட்) உடலுக்கும் உலகுக்கும் கேடு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த வாயுவை எங்கேயாவது கொண்டு போய் நமக்குப் பாதிப்பு வராதவாறு செய்ய முடியாதா?

பதில்: இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, நாம் பூமியின் மேற்புறத்தை கார்பன்-டை ஆக்ஸைடால் நிரப்பி வந்திருக்கிறோம். பலவிதமான எரிபொருள்களால் நாம் இந்தத் தீச் செயலை செய்து வந்திருக்கிறோம்.

திடீரென்று விழித்துக்கொண்டு இந்த வாயுவை அடக்கி வைப்பதற்கு வழிகளைத் தேடுகிறோம்.

கார்பன்-டை ஆக்ஸைட் சேர்ந்துகொண்டே போவதை எப்படியாவது தடுத்தே தீர வேண்டும். அதுதான் எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும். சில ஆராய்ச்சியாளர்கள், இந்த வாயுவை பழைய, பயன்படாத பெட்ரோலியக் கிணறுகளின் ஆழத்தில் கொண்டுபோய் விட்டுவிடலாம் என்றும்; வேறு சிலர் கடலுக்கடியில் மிக ஆழத்தில் கொண்டுபோய் விட்டுவிடலாம் என்றும் கருதுகிறார்கள். ஆனால், அப்படியே கொண்டு போய் புதைத்தாலும் எவ்வளவு காலத்துக்கு அது அங்கேயே இருக்கும் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது என்கிறார்கள். 

கார்பன்-டை ஆக்ஸைடின் தேவையும் உலகிற்கு வேண்டியதிருப்பதால் இதை எப்படிச் செய்து முடிப்பது என்று விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் சீக்கிரம் இதற்கு சரியான வழியைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவோம்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com