செய்திச் சிட்டு!

இன்னிக்கு சனிக்கிழமையாச்சே!'' என்றான் பாலா.
செய்திச் சிட்டு!

""இன்னிக்கு சனிக்கிழமையாச்சே!'' என்றான் பாலா.
""அதுக்கென்ன?'' என்று வேர்க்கடலையைக் கொறித்துக்கொண்டே கேட்டான் ராமு.
""நியூஸ் குருவியைக் காணோமே....''என்றாள் மாலா.
""ஓ!..... செய்திச் சிட்டா?'' என்று ஆவலோடு கேட்டாள் மாலா.
பேசிக்கொண்டிருக்கும்போதே விர்ர்ர்ரென்று பறந்து வந்து மரக்கிளையில் அமர்ந்து சிறகை ஒரு முறை படபட வென்று அடித்துவிட்டு தொண்டையைச் செறுமிக்கொண்டது சிட்டு.
""இந்த வாரம் என்ன விசேஷம்?'' என்று கேட்டான் பாலா.
""ஒரு குட்டிப் பையன் வி-டியூபிலே சக்கைப் போடு போடுகிறான்!''
""அதென்னது அது? வி- டியூப்? யூ - டியூப்னு தானே சொல்லுவாங்க....'' என்று மாலா கேட்டாள்.
""ஆமாம்.... அதாவது வர்ச்சுவல் யூ-டியூபை அப்படிச் சொல்லுவாங்க..... அதாவது கிராஃபிக் எஃபெக்ட்ஸ்லே விஷயங்களைச் சொன்னா அதுக்கு வர்ச்சுவல் யூ-டியூப்னு சொல்றாங்க.... சரி, நாம யூ-டியூப்னே சொல்லுவோம்.... அந்தக் குட்டிப் பையன் பேரு ரியான் காஜி. வயசு எட்டு! 2015 -இல் "ரியான்ஸ் டாய்ஸ் ரிவியூவ்' னு ஒரு சானல் ஆரம்பிச்சான். அதாவது விளையாட்டுப் பொருள்களைப் பற்றிய விமர்சனம்!.... எல்லா விளையாட்டுச் சாமான்களையும் அவன் விமர்சனம் செய்வான். எல்லா விமர்சனமும் கிராஃபிக் கலப்போடு இருக்கும்! ரியானின் அம்மா அவனுக்கு ரொம்ப உதவியா அதில் தன்னோட பங்கை ரொம்ப உற்சாகமா செய்வாங்க.... நீங்க எல்லாம் அந்தச் சானலை கண்டிப்பா பாருங்க.... ஏகப்பட்ட அறிவியல் செய்திகள்.... விளையாட்டுப் பொருள்களாலேயே கத்துக்கலாம்.... சானலை பார்க்கறவங்க பிரமிச்சுப் போயிடுவாங்க! உலகமே அந்த டாய்ஸ் ரிவியூவை ரொம்ப ஆச்சரியமா பார்த்தது. 2 கோடியே 20 லட்சம்பேர் அந்தச் சேனலை ரொம்ப ஆர்வமா பார்த்தாங்க..... 2019-இல் ரியான் காஜியின் வருமானம் என்ன
தெரியுமா?''
""என்ன?'' என்று ஆவலோடு அனைவரும் கண்களை விரித்தனர்!
""185 கோடி ரூபாய்!'' என்றது சிட்டு.
""யம்மாடிய்யோவ்!'' என்றனர் அனைவரும் கோரஸாக.
""2020-ஆம் ஆண்டிலும் அவனுக்கே முதலிடம்..... இந்த முறை சுமார் 225 கோடிக்கும் மேல்! ஆனால் கிராஃபிக் எஃபெக்ட்úஸாடு இந்த மாதிரி வி - டியூபிங் ( சரி, சரி, யூ-டியூப்னே வெச்சுக்குவோம்) செய்ய ரொம்ப செலவும் ஆகும்!'' என்றது சிட்டு.....
""எனக்கு ஒரு சந்தேகம் சிட்டு...'' என்றான் ராமு.
""என்ன?'' என்று கேட்டது சிட்டு.
""நீயே ஒரு நிஜப் பறவையா?..... ரியான் காஜி விமர்
சனம் செய்த விளையாட்டுப் பொம்மைக் குருவியா?''
""அதானே பார்த்தேன்.... இன்னும் எதுவும் குசும்பா ஒண்ணுமே கேக்கலியேன்னு.....!..... ஓ கே!.... அந்த கடலையிலே எனக்கும் கொஞ்சம் கொடேன்!''
ராமு கையில் இருந்த கடலையை நீட்ட, சிட்டு அழகாக அவனது உள்ளங்கையில் அமர்ந்து கொறித்துவிட்டு, ""சரி அடுத்த வாரம் சந்திக்கலாம்..... பை பை!'' என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com