விடுகதைகள்
By DIN | Published On : 27th February 2021 06:00 AM | Last Updated : 27th February 2021 06:00 AM | அ+அ அ- |

1. உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே பானம்.
2. கீறினால் சோறு தரும்... நீர் ஊற்றினால் சேறு தரும்...
3. விரிந்த வயல் வெளியில் விதைத்த நெல் மணிகள்...
4. இனிப்புப் பொட்டலத்துக்கு இரண்டாயிரம் பேர் காவல்...
5. கையில்லாமல் நீந்தி கடல் கடப்பான்... இவன் யார்?
6. எண்ணத்தை விதைத்து வண்ணமாய் அறுவடை செய்வது...
7. இவனுடைய காவலுக்கும் இவன் வாழ்வதற்கும் ஒரே வீடு...
8. கோழி போல உருவம், குதிரை போல ஓட்டம்...
9. கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழி காட்டுவான்...
விடைகள்
1. தண்ணீர்
2. நிலம்
3. வானம், நட்சத்திரங்கள்
4. தேன்கூடு
5. கப்பல்
6. ஓவியம்
7. ஆமை
8. நெருப்புக் கோழி
9. கைத்தடி