கருவூலம்: கடல் பகுதியில் நாடுகளின் உரிமை!
By DIN | Published On : 12th March 2021 09:23 PM | Last Updated : 12th March 2021 09:23 PM | அ+அ அ- |

பிராந்திய கடல் பகுதி!
(டெரிடோரியல் வாட்டர்)
ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் மைல் தொலைவு வரையிலான பகுதி அந்த நாட்டின் " (பிராந்திய கடல் பகுதி "(டெரிடோரியல் வாட்டர்) ' எனப்படுகிறது. நாட்டிகல் மைல் என்பது கடற்கரையிலிருந்து சுமார் 1.852 கி.மீ. ஆகும்! எனவே கடற்கரையிலிருந்து (12ல1.852) 22.224 கி.மீ. தூரம் வரை அந்த நாட்டின் முழு நிர்வாக, சட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது!
தொடர் பிராந்திய கடல் பகுதி
(கன்டிஜியூஸ் úஸான்)
கடற்கரையிலிருந்து 24 நாட்டிகல் மைல் வரையிலான கடல் பகுதி, "தொடர் பிராந்தியக் கடல் பகுதி (கன்டிஜியூஸ் úஸான்)' எனப்படுகிறது. இதுவும்
அந்நாட்டின் முழுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியாகும்.
சிறப்புப் பொருளாதாரகடல் மண்டலம்!
(எக்ஸ்க்ளூஸிவ் எகனாமிக் úஸான்)
இப்பகுதியில் மீன் பிடித்தல், கடல் வளங்களைச் சேகரித்தல், எண்ணை அகழ்வாய்வு, மேலும் பல கடல் ஆராய்ச்சிகளை செய்ய அந்த நாடு உரிமை படைத்தது! இப்பகுதி கடற்கரையிலிருந்து 200 நாட்டிகல் மைல் தொலைவு வரை ஆகும்.
ஹை சீ - உயர் கடல்!
ஹைசீ எனப்படும் உயர் கடல் பகுதி எல்லா நாட்டிற்கும் பொதுவானது. எந்த நாட்டிற்கும் இப்பகுதியில் எந்த உரிமையும் கிடையாது!
தொகுப்பு : கோட்டாறு ஆ.கோலப்பன்.