விடுகதைகள்
By DIN | Published On : 27th November 2021 05:25 PM | Last Updated : 27th November 2021 05:25 PM | அ+அ அ- |

1. இரட்டைப் பிறவிகள் இவர்கள். ஆனால் ஒருவன் கீழே வந்தால் மற்றவன் மேலே போவான். யார் இவர்கள்?
2. விழுந்த விதையைப் பாறை மேல்தான் விதைத்தார்கள். ஆனாலும் பார்ப்பவர் வியக்க முளைத்தது இந்த விதை...
3. தச்சரும் செய்யவில்லை, கொத்தனாரும் செய்யவில்லை. தானே முளைத்தது இந்தத் தேர்...
4. சிவப்பு மொசைக்கொட்டை... பகட்டும் பட்டு சட்டை தரும். இது என்ன?
5. நன்றாக உழைக்கவும் செய்வான்... நன்றாக உதைக்கவும் செய்வான்...
6. மூன்று கொண்டை வைத்திருப்பாள்... ஆனால் பெண் அல்ல...
7. ஒருநாள் முழு முகத்தையும் காட்டுவான்... இன்னொரு நாள் முகமே காட்ட மாட்டான்...
8. உடல் முழுவதும் நூறு கட்டு, உச்சி முடிக்க கட்டே இல்லை...
விடைகள்
1. தராசுத் தட்டுகள்
2. பல்
3. புற்று
4. பட்டுப்பூச்சி
5. கழுதை
6. களிமண் அடுப்பு - அதன் விளிம்புகள்
7. நிலவு
8. தென்னை மரம்