வாழ்த்துக்குரிய குட்டி!
By அழகு இராமானுஜன் | Published On : 16th October 2021 06:00 AM | Last Updated : 16th October 2021 06:00 AM | அ+அ அ- |

சின்னக் குட்டி, ஆட்டுக் குட்டி
சிவப்பு நிறக்குட்டி!
அன்னை ஆடு கொடுக்கும் பாலை
அருந்தி வளரும் குட்டி!
கள்ளம் கபடு இன்றித் தெருவில்
துள்ளித் திரியும் குட்டி!
வெள்ளை நாயின் குட்டி நட்பை
விசிவாசிக்கும் குட்டி!
மாட்டைக் கண்டால் மருண்டு மதிலின்
மறைவில் பதுங்கும் குட்டி!
பாட்டி மடியில் சற்று நேரம்
படுத்துப் புரளும் குட்டி!
கொம்பில்லாத சிரசால் காலை
உரசு கின்ற குட்டி!
வம்பு செய்யாக் குட்டி - எனது
வாழ்த்துக் குரிய குட்டி!