அபூர்வ அப்பம்!

அரிசிமாவை அரைத்தெடுத்து அடுப்பு மூட்டி நெருப்பெரித்து ஆச்சி சுட்டு எடுத்திடாத அப்பம் - கைக்குள் 
அபூர்வ அப்பம்!

அரிசிமாவை அரைத்தெடுத்து 
அடுப்பு மூட்டி நெருப்பெரித்து 
ஆச்சி சுட்டு எடுத்திடாத அப்பம் - கைக்குள் 
அடக்கியாரும் பிடித்திடாத அப்பம்!

விரும்பும்போது நடைபிடித்து 
வீதியோரக் கடைபிடித்து 
விலைக்கு வாங்கக் கிடைத்திடாத அப்பம்! - வைக்கும் 
விருந்திலேயும் படைத்திடாத அப்பம்!

எறும்பு கூடி அரித்தெடுத்து 
எலிகள் தேடிக் கொறித்தெடுத்து 
இறைத்திடாமல் குறைந்து போகும் அப்பம் ! - முற்றும் 
இயற்கையாக மறைந்துபோகும் அப்பம்!

திரும்ப வானில் பிறப்பெடுத்து 
தீப ஒளிப் பெருக்கெடுத்து 
தினம் இரவில் வளரும் உலா அப்பம்! - நெற்றித் 
திலகவட்ட வடிவ நிலா அப்பம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com