விடுகதைகள்
By DIN | Published On : 04th September 2021 06:00 AM | Last Updated : 04th September 2021 06:00 AM | அ+அ அ- |

1. எங்க ஊர் வெள்ளையன் வலையில்லாமல் மீன் பிடிப்பான்...
2. ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளாது, ஆனால் எல்லாவற்றையும் பார்க்கும்...
3. கருத்த வயிற்றுக்காரன் வயிற்றுக்குள்ளே வெள்ளை முத்துக்கள்...
4. மழையில்லாமல் ஆமை கெட்டது, ஆமை இல்லாமல் சீமை கெட்டது...
5. களஞ்சியத்தில் சேர்த்து வைக்காத தானியம், கொடை வள்ளல் வாரி வழங்க முடியாத தானியம்...
6. மென்மையான வெள்ளை மகராசி, காயத்துக்குத் துணையாவாள்...
7. நல்லதைக் கொட்டிவிட்டு கெட்டதைச் சேர்த்துக் கொள்வான்...
8. கையைத் தொட்டுப் பார்த்தார், பையைத் திறக்க வைத்தார்...
விடைகள்
1. கொக்கு
2. கண்கள்
3. மண்பானை, சோறு
4. வேளாண்மை
5. ஆற்று மணல்
6. பஞ்சு
7. சல்லடை
8. டாக்டர்