1. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண்.
இது என்ன?
2. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான்,
மருந்தாவான். இவன் யார்?
3. நூல் நூற்கும் நெசவாளிக்குக் கட்டிக்கொள்ள
துணியில்லை இவர் யார்?
4. உடம்பெல்லாம் சிவப்பு, இவருடைய குடுமி பச்சை,
யார் இவர்?
5. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான். இவன் யார்?
6. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு.
இது என்ன?
7. செடி வளருவது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?
8. பட்டுப்பை நிறைய பவுண் காசுகள். இது என்ன?
விடை
1. மஞ்சல் செடி
2. தேன்
3. சிலந்தி
4. தக்காளி
5. நுங்கு
6. நாணயம்
7. வேர்க்கடலை
8. மிளகாய் வத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.