மான் குட்டி

மான் குட்டி

அந்த வனத்தில் புள்ளிமான் ஒன்று தன் சின்னஞ்சிறு குட்டிக்கு உடம்பு முழுதும் நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
Published on

அந்த வனத்தில் புள்ளிமான் ஒன்று தன் சின்னஞ்சிறு குட்டிக்கு உடம்பு முழுதும் நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. முதலில் நக்கிக் கொடுத்தது குளிப்பாட்டுதல், மீண்டும் நக்கிக் கொடுப்பது துவட்டி விடுதல்,  மீண்டும் நக்கிக் கொடுப்பது தலை சீவி விடுதல். மான்குட்டியோ துள்ளிக் குதித்துக்கொண்டே இருந்தது.

ஆதிவாசிகளின் குடிசைகள் அருகே இருந்தன. அங்குள்ள சிறுவர்கள் குட்டியைத் தோளில் தூக்கி விளையாடுவார்கள். தாய்மானுக்கு இவர்களைப் பற்றித் தெரியுமாதலால் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும்.

சிறுவர்கள் மான்குட்டிக்குப் புல்லைப் பறித்து தின்னத் தருவார்கள். ஆற்றுத் தண்ணீரில் குட்டியைப் போட்டால் தானே நீந்தி வந்துவிடும். மனிதக் குழந்தைக்கு என்றால் தாயே தூக்கிப் பாலுட்ட வேண்டும், நடக்கக் கற்றுத்தர வேண்டும், நீச்சல் கற்றுத்தர வேண்டும். விலங்குகளின் குட்டிகள் அப்படியல்ல. தானே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும். அது இயற்கை அளித்த வரம்.

அந்தச் சிறுவர்கள் ஆற்று நீரில் இறங்கி நீந்திச் சென்றார்கள். குட்டியையும் நீந்தியவாரே அழைத்துச் சென்றார்கள். ஒரு வெளியில் கரை ஏறினார்கள். அங்கே பசும் புல் தளதளவென்று நிறைய இருந்தது. அதில் மேயவிட்டு அவர்கள் விளையாடினார்கள்.

ஆலமரத்து கவட்டைக் கிளையில் ஒரு சிறுத்தை உறங்குவது போலப் படுத்திருந்தது. ஒரு பக்கத்தில் சில கழுதைப் புலிகள் மேய்ந்து கொண்டிருந்தன. 
கழுதைப் புலி ஒன்று என்றால்,  சிறுத்தை அதை விரட்டிவிடும்.  ஆனால், ஒன்றிரண்டு சேர்ந்து வந்தால் புலியோ, சிறுத்தையோ அவற்றைக் கண்டு பயப்படும். கழுதைப் புலியின் தாடை பலமானது. அதால் அடித்தால் எலும்பு முறிந்துவிடும். அதனால் புலிகூட இதற்குப் பயப்படும். இது வனத்தோட்டி. எலும்புகள், மற்றவை கழித்த மாமிசத் துண்டுகள் கழிவுகள் அனைத்தையும் தின்றுவிடும்.

மரத்துப் புலி மெல்ல எழுந்தது. மான்குட்டி மேல் பாய நினைத்தது. அதைக் கண்ட சிறுவர்கள் மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர். 'தொப்' பென்று குட்டி அருகே பாய்ந்தது. உடனே கழுதைப் புலிகள் சிறுத்தை மேல் பாய்ந்தன. சிறுத்தை ஓடிவிட்டது. சிறுவர்கள் மகிழ்ந்து மான்குட்டியை அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com