சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

வெற்றி உனக்கு நண்பன்
கனிவான இதயங்களே தோட்டங்கள்
கனிவான எண்ணங்களே வேர்கள்
கனிவான வார்த்தைகளே மலர்கள்
கனிவான செயல்களே பழங்கள்!  
- ஹென்றி வோர்ட்ஸ் வொர்த்


ஒழுக்கக் கல்வி
ஒழுக்க விஷயங்களைப் பற்றி கற்பித்தல் மிகமிக முக்கியமான விஷயமாகும். ஏனெனில் அதன் மூலம்தான் மிக உயர்ந்த குடிமக்களை உருவாக்க 
முடியும்!
 -ரூஸ்வெல்ட்


முன்னேற்றத்தின் கதவுகள்
உங்கள் வாழ்க்கை உங்களை அழுத்தி நீங்கள் தர்ம சங்கடமாக உணரும் சமயத்தில் ஒரு விஷயத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். வெற்றியின் ஒரு பகுதியே அந்த அழுத்தமாகும். அழுத்தம் இல்லை என்றால் வைரங்கள் இல்லை. 
-ரஸ்கின்


கற்பனை வாழ்க்கை
ஒருவர் தனது கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறி, அவர் கற்பனை செய்த வாழ்க்கையை வாழ முயற்சித்தால், எதிர்பாராத நேரத்தில் அவர் வெற்றியடைவார். 
-ஹென்றி டேவிட்


அன்பே வெல்லும்...
உலகை வெல்வதற்கு வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் பயன்
படுத்த வேண்டாம். அன்பையும், 
இரக்கத்தையும் பயன்படுத்துவோம். 
-அன்னை தெரசா

வழிகாட்ட உதவும் நான்கு...

நான்கு நபர்களை வெறுக்காதே: 
தாய், தந்தை, சகோதரன், சகோதரி

.
நான்கு நபர்களிடம் கண்டிப்பு காட்டாதே: 
ஏழை, அநாதை, முதியவர், நோயாளி.

நான்கு நபர்களைப் புறக்கணி: 
முட்டாள், மடையன், சோம்பேறி, சுயநலவாதி.

நான்கு நபர்களுடன் நட்புடன் பழகு: 
கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவன், மனத்தூய்மை உள்ளவன், கண்ணியவான், உண்மையானவன்.

-அருட்பிரகாச வள்ளலார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com