ஒவ்வொரு புயல் வரும்போதும் அதற்குப் பெயரும் வருகிறதே. இது எப்படி? யார் பெயர் சூட்டுகிறார்கள். எதை வைத்துப் பெயர் சூட்டுகிறார்கள்?
2000-ஆம் ஆண்டில் சில முக்கிய நாடுகள் ஒன்று கூடி (இந்தியா, பாகிஸ்தான், மியான்மர், ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சில) இனி வரும் காலங்களில் புயல்களுக்குப் பெயர் சூட்டுவது என்று முடிவெடுத்தார்கள். இதன்படி இந்த நாடுகள் அனைத்தும் தங்களுக்கு விருப்பமான பெயர்களைத் தேர்வு செய்தனர்.
எட்டு எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும், எந்த வகையிலும் மத ரீதியாகவோ இன ரீதியாகவே மக்களின் மனதைப் புண்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும், எளிதில் எல்லோரும் உச்சரிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று சில நிபந்தனைகள் உள்ளன.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மட்டும் இதற்கு 169 பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது. அண்மையில் வந்த "அம்பான்' புயலின் பெயர்கூட இந்தியா பரிந்துரை செய்ததுதான்! இந்தப் பெயர் புயலுக்குச் சூட்டப்படுவதற்கு முன் குழு நாடுகளின் அனுமதி பெற வேண்டும்.
அதெல்லாம் சரி, இந்தப் பெயர்களை யார் சூட்டுகிறார்கள் என்கிறீர்களா? இதுவரை பரிந்துரை செய்யப்பட்ட, தேர்வு செய்து சூட்டப்பட்டு பெயர்களில் பல பெயர்கள் பொது மக்களாகச் சூட்டியதுதான்.
நீங்கள்கூட உங்களுக்குப் பிடித்த பெயரை வானிலை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!

தமிழகத்தில் 5938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மத்திய சிறப்புப் பாா்வையாளா்

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


