ஒன்னுமே இல்லே... 

கொடைவள்ளல் சந்திரசேகரனின் வீட்டின் முன் காத்துக்கிடந்தான் ஆறுமுகம். வாயிற்காவலன் நாசுக்காகத் துரத்திவிட்டும் அவன் போகவில்லை. வள்ளலை சந்தித்து, பெரிய தொகையை நன்கொடையாய்ப் பெறத் திட்டமிட்டிருந்தான் அவன்.
ஒன்னுமே இல்லே... 

கொடைவள்ளல் சந்திரசேகரனின் வீட்டின் முன் காத்துக்கிடந்தான் ஆறுமுகம். வாயிற்காவலன் நாசுக்காகத் துரத்திவிட்டும் அவன் போகவில்லை. வள்ளலை சந்தித்து, பெரிய தொகையை நன்கொடையாய்ப் பெறத் திட்டமிட்டிருந்தான் அவன்.
அடிக்கடி அவன் வாசலில் தென்படுவதை அறிந்து அவனை உள்ளே அனுப்பச் சொன்னார் வள்ளல். அவன் உள்ளே நுழைந்ததும் "தடாலென' அவர் காலில் விழுந்தான். ""ஐயா... என் குடும்பத்தைக் காப்பாத்துங்கையா... ரெண்டு புள்ளைங்களும் பட்டினி கிடக்காங்க. என்கிட்ட எதுவுமே இல்லே ஐயா'' என்று அலறினான்.
""உன்கிட்ட ஒன்றுமே இல்லையா?'' என்றார் வள்ளல்.
""ஆமாய்யா ஒன்னுமே இல்லை. ஒரு பெரிய தொகை தந்தீங்கன்னா, வியாபாரம் பண்ணி பொழச்சுக்குவேன்'' என்றான் ஆறுமுகம்.
""ஒன்னுமே இல்லேங்கறே... நீ என்ன வேலை பாக்கறே?'' என்றார். 
""ஐயா.. வேலையே கிடைக்கலைய்யா?'' என்று அழுதான்.
""இதுக்கு முன்னால என்ன வேலை பார்த்தே?''
அவன் "இல்லை' என்பது போல் தலையை ஆட்டினான். 
""அப்ப... வேலைக்குப் போகாமலே குடும்பம் நடத்தி, குழந்தைங்களோட வாழ்றே... கஷ்டமாச்சே... ஒன்னுமே இல்லாத நீ இதெல்லாம் எப்படி செஞ்சே?''
""அதான் சொல்றேன்யா, ஒன்னுமே இல்லாம கஷ்டப்படறோம்யா...''
""சரி, ஒன்னுமே இல்லேங்கறேல்ல. உன் ரெண்டு கண்ணையும் தந்துடு. ரெண்டு லட்சம் தரேன்'' என்றார் வள்ளல். 
அவன் முகம் வெளிறியது. ""என்ன தயங்கறே... சரி, கண் வேண்டாம். உன்னோட ஒரு கை, ஒரு காலை வெட்டி எடுத்துத் தந்துடு. ஐந்து லட்சம் தரேன்.''
அவன் அரண்டுபோய் நின்றான். ""பார்த்தியா! விலைமதிப்பற்ற கண்கள், கை கால்கள் உன்னிடம் இருக்கின்றன. அதை வைத்து உழைத்துப் பிழைக்காமல் ஒன்னுமில்லேன்னு சொல்லி சோம்பேறியாக வாழ்கிறாயே... உனக்கு தோட்டத்தில் வேலை போட்டுத் தரச் சொல்கிறேன். இப்பவே நீ வேலையைச் செய்யத் தொடங்கு'' என்றார். 
உதவியாளரை அழைத்து ஆறுமுகத்தைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். ஆறுமுகம் உண்மையை உணர்ந்தான். அடிபணிந்து உதவியாளருடன் நடந்து சென்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com