விடுகதைகள்

எலும்பு இருக்குது தோல் இல்லை, கண் இருக்குது தலை இல்லை, தண்ணீரிலே நீந்துது... தரையிலே நடக்குது...


1.  எலும்பு இருக்குது தோல் இல்லை, கண் இருக்குது தலை இல்லை, தண்ணீரிலே நீந்துது... தரையிலே நடக்குது...

2. நாட்டியக்காரனுக்கு ஒரு கால்தான், மெலிதாகப் பாடவும் செய்வான்...

3. உன்னைப் போலவே இருப்பான் உன்னிடமும் என்னிடமும் பேச மாட்டான்...

4. கண்ணிலே பயம், தலையிலே மரம்...

5. மாடோ ஓர் அங்குலம்தான், வாலோ அரை மைல் நீளம்...

6.  வால் இல்லாத பெற்றோருக்கு வால் உள்ள பிள்ளை...

7. பிரிக்க முடியாத நண்பர் இருவர், ஆனால் ஒருவர் முன்னே போனால் மற்றவர் பின்னேதான் போவார்...

8. தன் தலையைத் தானே விழுங்கிக் கொள்வான்...

விடைகள்

1.  நண்டு    
2. பம்பரம்
3. முகம் பார்க்கும் கண்ணாடியில் பிம்பம்     
4. கலைமான்  
5.  ஊசியும் நூலும்
6.  தவளை, தவளைக்குஞ்சு  
7.  கால்கள்  
8.  ஆமை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com