அங்கிள் ஆன்டெனா

விமானப்படை விழாக்களில் சில விமானங்களைத் தலைகீழாகப் பறக்கவிட்டு சாகசங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல பறவைகளாலும் தலைகீழாகப் பறக்க முடியுமா? 
அங்கிள் ஆன்டெனா
Updated on
1 min read


விமானப்படை விழாக்களில் சில விமானங்களைத் தலைகீழாகப் பறக்கவிட்டு சாகசங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல பறவைகளாலும் தலைகீழாகப் பறக்க முடியுமா? 

பறவைகள் பறப்பதே  ஓர் அழகுதான். அவை தலைகீழாகப் பறப்பதற்கு ஒருபோதும் முயற்சி செய்வதில்லை. அது  இயலாத காரியமும்கூட. சில பறவைகள் வேகமாக டைவ் அடிப்பதைப் போல கீழே இறங்குவதைப் பார்த்திருப்போம். ஆனால், பறவையால் தலைகீழாகப் பறக்க முடியாது. இதற்குக் காரணம் அவற்றின் சிறகுகளின் அமைப்புதான். சிறகுகள் ஒன்றின் மீது ஒன்றாக சற்றுத் தள்ளி கூரையில் ஓடு அடுக்கியது போல ஓர் அடுக்காக அமைந்திருக்கும். இந்த அடுக்கின் கீழ்ப்பகுதி வழியே காற்று உள்ளே போவதால் அவற்றின் உடல் மேலும் லேசாகி பறப்பதற்கான மெக்கானிசம் உண்டாகிறது.

பறவைகள் தலைகீழாகப் பறந்தால் என்ன ஆகும்? இந்தச் சிறகு அடுக்கு அமைப்பு தலைகீழாகும்போது சிறகுகள் ஒழுங்கான அடுக்கை இழந்து, கன்னாபின்னாவென்று விலகிவிடுவதால் இந்த மெக்கானிசம் ஒழுங்காக வேலை செய்ய இயலாமல் போய்விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com