சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.

ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் மகாபாரதத்தில் வரும் இணையற்ற
வீரர் ஒருவரின் பெயர் கிடைக்கும். 

எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்...


1.  அரசர்கள் வாழும் இடம்...
2.  இதை நெருப்பில் போட்டால் புகையும் வரும் வாசனையும் வரும்...
3.  மழை பெய்தால் உடனே இந்த வாசனை வரும்...
4. மனிதர்களுக்கும் இந்தப் பெயர் உண்டு, நிலவுக்கும் இந்தப் பெயர் உண்டு...
5. இளவரசனை இப்படியும் சொல்வார்கள்...


விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1. அரண்மனை  
2. சாம்பிராணி  
3. மண்வாசனை,  
4. சந்திரன்  
5. யுவராஜன்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : அபிமன்யு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com