அங்கிள் ஆன்டெனா: நன்கு வளர்ந்த யானையின் எடை எவ்வளவு இருக்கும்?

ராசரியாக ஒரு யானையின் எடை 5,000 கிலோ.  புதிதாகப் பிறந்த குட்டியின் எடை சுமாராக 90  கிலோ முதல் 130 கிலோ வரை இருக்கும்.
அங்கிள் ஆன்டெனா: நன்கு வளர்ந்த யானையின் எடை எவ்வளவு இருக்கும்?
Updated on
1 min read

நன்கு வளர்ந்த யானையின் எடை எவ்வளவு இருக்கும்?

பதில்:   சராசரியாக ஒரு யானையின் எடை 5,000 கிலோ.  புதிதாகப் பிறந்த குட்டியின் எடை சுமாராக 90  கிலோ முதல் 130 கிலோ வரை இருக்கும்.  ஒரு குட்டி யானையின் எடை 30 மனிதக் குழந்தைகளின் மொத்த எடைக்குச் சமம்.

இந்தப் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, யானைகளால் தண்ணீரில் மிதக்க முடியும் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

நீந்தும்போது யானை தனது மிகப்பெரிய நுரையீரல்களால் மிதக்கும் திறனைப் பெறுகின்றது.  தும்பிக்கையை நீருக்கு மேல் நீட்டி, சுவாசிக்கின்றது. நீரில் மிதக்கும்போது, அதன் கால்களுக்கும் மூட்டுகளுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கின்றது.

யானையின் தோலிலின் எடை மட்டும் 1000 கிலோ! அதன் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டது. தன்மீது ஒரு சிறு ஈ அமர்வதைக் கூட யானை உணர்ந்து கொள்ளும்.

யானையின் காதுகள்தான் அதன் விசிறிகள். யானைகளின் உடல் வெப்பம் அதிகம் ஆகும் போதெல்லாம் காதை அசைத்து உடல் வெப்பத்தை வெளியேற்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com