விமான நிலையங்கள் இல்லாத நாடுகள்

உலகில் விமான நிலையங்கள் இல்லாமல் சில நாடுகள் இருக்கின்றன. அவையாவன:
விமான நிலையங்கள் இல்லாத நாடுகள்


உலகில் விமான நிலையங்கள் இல்லாமல் சில நாடுகள் இருக்கின்றன. 

அவையாவன:

அன்டோரா: சுமார் 468 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்த ஐரோப்பாவின் ஆறாவது சிறிய நாடு. உலகின் 16-ஆவது சிறிய நாடு.  மக்கள் தொகை 85 ஆயிரம் பேர் மட்டும்தான்.  இங்குள்ளோர் ஸ்பெயினில் உள்ள விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். 

லிச்சென்ஸ்டீன்: ஐரோப்பாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய நாடு. 160 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. ஜெர்மனிய மொழியைப் பேசுகிறார்கள்.  இங்குள்ளோர் சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

சான்மரினோ: ஐரோப்பியாவில் அமைந்துள்ள சிறிய நாடு. இங்குள்ளோர் இத்தாலி நாட்டில் உள்ள விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

மொனாகோ: மேற்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு.  பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ளது.  செல்வந்தர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக இருந்தாலும், விமான நிலையங்கள் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com