அங்கிள் ஆன்டெனா: பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, இதற்குக் காரணம் என்ன?

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை!  நாம் இந்தப் பூமியில்தான் இருக்கிறோம்.
அங்கிள் ஆன்டெனா: பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, இதற்குக் காரணம் என்ன?

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை! நாம் இந்தப் பூமியில்தான் இருக்கிறோம். ஆனாலும், பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, இதற்குக் காரணம் என்ன?

பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு என்பது 40,075 கி.மீ. ஆகும். இந்த ரேகையில் ஒரு புள்ளி முழுவதும் சுழன்று திரும்ப 24 மணி நேரம் எடுக்கிறது. இதை நாம் ஒரு நாள் என்கிறோம்.

பூமி எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது தெரியுமா? ஒரு நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் பூமி சுழல்கிறது. அதாவது ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1,000 மைல் அல்லது 1610 கிமீ வேகத்தில் சுழலும். பூமியைப் போன்ற பெரிய உருண்டை சுற்றுவதை அதன் மேலேயே இருக்கும் நாம் உணர்வதில்லை. இதற்குக் காரணம் இந்த வேகம்தான்.

ஆனால், மிகவும் முக்கியமான காரணம், பூமியின் புவி ஈர்ப்பு விசையால் பூமி சுழலும்போது நாமும் தரையுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறோம். பூமிக்கு மேலாக மிதந்தாலும் புவிஈர்ப்பு விசையால் அதனுடன் சேர்ந்து நாமும் சுழன்று கொண்டுதான் இருப்போம். அதனால் ஒருபோதும் நம்மால் பூமி சுழல்வதை உணர முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com