ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி
அழகான ஆட்டுக்குட்டி!
துள்ளித் துள்ளி ஓடுது
துடிப்பாய் எங்கும் போகுது!
தாயைத் தேடித் தேடியே
தாவிக் குதித்து வருது!
முட்டி முட்டிப் பாலையே
மூச்சு முட்டக் குடிக்குது!
திண்ணை மேயத் தாளது
திரும்பி நின்றும் பார்க்குது!
அண்ணன் வரும் போதிலே
அவரை முட்டப் போகுது!
தூக்கி வைத்துக் கொண்டாயோ
துள்ளி கீழே இறங்குது!
எங்கள் வீட்டு ஆட்டுக்குட்டி
எல்லாருக்கும் செல்லமே!