'கடளளின் நாடக மேடை'
By ராஜேஸ்வரி | Published On : 11th December 2022 06:00 AM | Last Updated : 11th December 2022 06:00 AM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூஸிலாந்து வேல்ஸ் பகுதியில் உள்ள கடற்கரை நகரம்- ஸ்டீபன்ஸ் துறைமுகம். தென் பசிபிக் கடலில் உள்ள கடற்கரை பூமி. கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவரால், 1770-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. பூமியில் "கடளளின் நாடக மேடை' என்று இந்தப் பகுதியை அழைக்கின்றனர்.
1790-இல் முதன்முதலாக 5 கைதிகளை இங்கு படகில் அழைத்து வரும் முயற்சி நடைபெற்றது. ஆனால், கரைக்கு வரும் முன் அவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர்.
"சுறா ஸ்டீபன்ஸ்' என்று இந்தத் துறைமுகம் அழைக்கப்பட்டாலும், இந்தப் பகுதியில் சுறாவே கிடையாது. மேலே இருந்துபார்த்தால் இந்தப் பகுதி சுறா போன்று தெரியும். சிட்னி நகரில் இருந்து 2 மணி நேரப் பயணத்தில் வரலாம்.
மிக அழகான பிரதேசம், வெள்ளைவெளேர் மணல், சுத்தமான கடல்நீர், வீரதீர விளையாட்டுகள் மேற்கொள்ளப்படும் இடம், மணல் குன்றுகள் நிறைந்தது, மலைகள் நிறைந்தது, சுவையான கடல் உணள... என்ற சிறப்பம்சங்கள்இங்குள்ளன.
இங்குள்ள தேசியப் பூங்காவில் கடல் பறவைகள் நிறைந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கோலா பார்ப்பதற்கு கரடி போலளம், நம் ஊரிலுள்ள தேவாங்கு போலளம் இருக்கும் பிராணி தண்ணீரை நேரடியாக அருந்தாது. தைலமர இலைகளில் உள்ள நீரை உண்பதன் மூலம் நீரைப் பருகுகின்றன.
கோலா சரணாலயம்: கைவிடப்பட்ட கோலாக்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, இங்குள்ள சரணாலயத்தில் பராமரிக்கப்படுகின்றன. இனப்பெருக்கமும் நடைபெறுகிறது.
இத்தீவில் சிறிய கரையுள்ள நீர்படுகைகள் நிறைந்துள்ளன. திமிங்கிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. சிவப்பு வண்ணத்துடன் கூடிய காட்டு அல்லிகளை நன்கு ரசிக்கலாம்.