சொல் ஜாலம்
By DIN | Published On : 31st July 2022 06:00 AM | Last Updated : 31st July 2022 06:00 AM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் வெயில் காலத்தில் ஊரெங்கும் கிடைக்கும் பழம் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள்.
1. இதற்கு இரண்டு பக்கமும் அடி கிடைக்கும்...
2. கூடாரத்துக்குள் நடக்கும் இது குதூகலம் தரும்...
3.இது வந்தால் ஊர் இரண்டுபட்டுப் போகும்... இல்லையில்லை தாறுமாறாகி விடும்...
4. நாடுகளிடையே இது இருந்தால் சண்டையே வராது...
5. இது இருந்தால் போதும், எதையும் சாதிக்கலாம்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. மத்தளம் 2. சர்க்கஸ்
3. பூகம்பம்
4. சமாதானம்
5. துணிச்சல்
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : தர்பூசணி