விடுகதைகள்
By DIN | Published On : 19th March 2022 05:12 PM | Last Updated : 19th March 2022 05:12 PM | அ+அ அ- |

1.இடி இடிக்குது, மின்னல் மின்னுது, மழையை மட்டும் காணோம்...
2. வரைந்து வைத்த இரு கோடுகளுக்குள் இவனது
பயணம்...
3.வளைப்பார் வளைத்தால் வாயு வேகம்....
4.நோயுமில்லை, நெடியுமில்லை ஆனாலும் தினமும் மெலிகிறார் இவர்...
5.இங்கே ஒட்டுவார்கள், அங்கே வெட்டுவார்கள்...
6.வெள்ளைக்கார துரைதான் ஆனாலும் மஞ்சள் நிறம், தொப்பியோ இரண்டு...
7.விழுந்த பல் முளைக்காத ஓட்டை வாயன்...
8.வெயிலில் காய்பவன், தண்ணீரில் பொங்குபவன்...
விடைகள்
1. பட்டாசு
2. ரயில்
3. வில், அம்பு
4. நிலவு
5. கடிதம்
6. வறுத்த பட்டாணி
7. சீப்பு
8. சுண்ணாம்புக்கல்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G