தெரியுமா..?

பிரிட்டன் நாட்டில் தயாரான காகிதப் பணத்தில் நீரோட்டம் உள்கோடாய் அச்சிடப்பட்டது. இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன்.

பிரிட்டன் நாட்டில் தயாரான காகிதப் பணத்தில் நீரோட்டம் உள்கோடாய் அச்சிடப்பட்டது. இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன்.

"என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்' என்ற பாடலைப் பாடி "இந்தியா' பத்திரிகையில் பாரதி வெளியிட்டார்.  இதன் அரங்கேற்றம் சென்னை மூர் மார்க்கெட்டில் 1908-ஆம் ஆண்டில் நடந்தேறியது. அந்தப் பாடலுக்கு ஆங்கிலேய அரசு தந்த பரிசு என்ன தெரியுமா?  ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையாகும்.

ஹாங்காங்கில் நாணயங்கள் வெளியிடுவதில்லை.  அதற்கு பதிலாக ஒரு பைசா என்றாலும் அதற்கு காகித நோட்டுதான் வெளியிடப்படுகிறது.

முத்துச் சிப்பிகளின் உடலில் நமைச்சல் ஏற்படும்போது,  அதைத் தவிர்க்க நேக்ரி என்ற திரவத்தைச் சுரக்கிறது. இந்தத் திரவம் தூசிகளின் மீது படிந்து இறுகி முத்தாக மாறுகிறது.

1979-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-இல் பிரிட்டன் வேல்ஸ் பகுதியில் கினைட் என்ற இடத்தில் காட்சி அளித்த வானவில் மூன்று மணி நேரம் நீடித்தது.  உலகிலேயே அதிக நேரம் நீடித்த வானவில் இதுதான்.

இதுவரை வெளிவந்த சுய சரிதைகளிலேயே மிகப் பெரியது பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றியது. இதை எழுதியவர் அவரது மகன் ரண்டால்ஃப். இந்த நூலில் 19 ஆயிரத்து 100 பக்கங்களும், ஒரு கோடி வார்த்தைகளும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com