தெரியுமா...?

பெரும்பாலான பறவைகளுக்கு காலின் முன்புறம் மூன்று நகங்களும், பின்புறம் ஒன்றும்தான் இருக்கும். மரங்கொத்திக்கு முன்புறம் இரண்டும், பின்னால் இரண்டும் உள்ளன.

பெரும்பாலான பறவைகளுக்கு காலின் முன்புறம் மூன்று நகங்களும், பின்புறம் ஒன்றும்தான் இருக்கும். மரங்கொத்திக்கு முன்புறம் இரண்டும், பின்னால் இரண்டும் உள்ளன. அதனால்தான் செங்குத்தான மரத்திலும் நிற்க முடிகிறது. மேலும், அதன் வால் கெட்டியான இறகுகளால் ஆனது. அதன் மேல் தன் பாரத்தைத் தாங்கி ஊன்ற முடிகிறது.

விஞ்ஞானி ஆல்பர்ட் ஜன்ஸ்டினுக்கு நன்றாக வயலின் வாசிக்கத் தெரியும்.

பராகுவே நாட்டில் சில்லறை நாணயங்களை அந்த நாடு வெளியிடுவதில்லை.

நேபாள நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் 'தேசிய பஞ்சாயத்து'. 

அஸ்ஸாமியர் தங்களது மொழிகளை மலைநாட்டு மக்கள் மீது திணிக்க விரும்பியதால், நாகாலாந்து, மேகாலயா போன்ற புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

'கப்பலோட்டிய தமிழன்' என்றதுமே நமக்கு வ.உ.சிதம்பரனாரை நினைவுக்கு வரும். அதேபோல், 'கப்பலோட்டிய வங்காளி' என்று துவாரகாநாத் தாகூரை அழைக்கின்றனர். இவர் 1800களில் ஹூக்ளி நதி முகத்துவாரத்திலிருந்து வங்கக் கடல் வழியாக தூரக் கிழக்கு நாடுகளுக்கு கப்பல் விட்டு கடல் வணிகம் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com