தெரியுமா?

முதன்முதலில் ரப்பரை கண்டறிந்தவர் - கிறிஸ்டோபர்; நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர்- கிரான்ஸ்டட்.
தெரியுமா?


முதன்முதலில் ரப்பரை கண்டறிந்தவர் - கிறிஸ்டோபர்; நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர்- கிரான்ஸ்டட்.

நாட்டில் முதன்முதலில் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் டாக்டர் அம்பேத்கர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மம்மூட்டி, 4 முறை சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றவர். இவரது உருவம் பொறித்த தபால் தலையை ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானில், பிரன்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூட் சார்டர் ஆகியோர் அண்மையில் வெளியிட்டனர்.

யூனிவர்சல் டோனர் என்று அழைக்கப்படும் ரத்த வகை "ஓ' குரூப்.

 வைரத்தை எவ்வாறு சூடுபடுத்தினாலும் உருகவே உருகாது.

"கெப்ளர் 385'  எனும் நட்சத்திரம் புவியில் இருந்து 4,670 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இது சூரியனைவிட 10 சதவீதம் பெரியது. இந்த நட்சத்திரமும், இதைச் சுற்றிவரும் மூன்று கோள்களும் 2014-ஆம் ஆண்டு கெப்ளர் தொலைநோக்கி வாயிலாக, கண்டறியப்பட்டது. தற்போது மேலும் 4 புதிய கோள்கள் இந்த நட்சத்திரத்தைச் சுற்றிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்று தாத்ரா- நகர் ஹவேலி.  மராத்திய மன்னர்களுக்கும், போர்ச்சுகீசியர்களுக்கும் 1779-இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பிரித்துகொடுக்கப்பட்ட கிராமங்கள்தான் இவை. சுதந்திரம் அடைந்தவுடன் வெளியேறாமல் இருந்த போர்ச்சுக்கீசியரை 1954-இல் இந்தப் பகுதி மக்களே புரட்சி செய்து வெளியேற்றினர். 1961-இல் யூனியன் பிரதேசமாக இந்தியாவோடு இணைக்கப்பட்டது.  இந்தப் பகுதிக்கு மின்சாரம் வழங்குவது குஜராத், மகாராஷ்டிர அரசுகள்தான். இங்கு சாலைப் போக்குவரத்து மட்டுமே; ரயில் போக்குவரத்து கிடையாது.

பயன்படுத்தப்பட்ட கண்ணாடிப் பொருள்களைப் பொடியாக அரைத்து, கான்கரிட்டில்  கலந்து கனடா நாட்டில் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.  இதனால் சிமென்ட் பயன்பாடு குறைந்துள்ளதோடு, சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.

18 ஏக்கரில் அமைந்துள்ள அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 132 அறைகள், 35 குளியல் அரைகள், 6 தளங்கள் உள்ளன. இதன் வெளிப்புறச் சுவர் பகுதிகளை மட்டும் வண்ணம் பூசுவதற்கு 2,160 லிட்டர் (570 கேலன்) பெயின்ட் தேவைப்படுகிறது.

திரவ நிலையில் உள்ள உலோகம் பாதரசம் ஆகும்.

 மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துவது கீழாநெல்லி.  இலைகள் முள்களாக உள்ளதே சப்பாத்திக்கள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com