தண்ணீரின் அழகைப் பார்

தம்பி, பாப்பா வாருங்கள்,தண்ணீர் புரள்வதைப் பாருங்கள்!
Updated on
1 min read

தம்பி, பாப்பா வாருங்கள்,
தண்ணீர் புரள்வதைப் பாருங்கள்!
எம்பி எம்பி சுருள்சுருளாய்
இயங்குதல் வந்து பாருங்கள்!
அலையைத் தாண்டி வானைத் தொட
அலையும் மீன்களைப் பாருங்கள்!
வலையை அறுத்து மீனவரை
வம்புகள் செய்வதைப் பாருங்கள்!
நுரையாம் பூக்கள் தண்ணீரில்
நுழைந்து அலைவதைப் பாருங்கள்!

கரையைத் தொட்டு வாளைமீன்
காதுக் கதவைப் பாருங்கள்!
பெரிய மீன்கள் சிறுமீனை
பேசி அழைப்பதைப் பாருங்கள்!
அரிய காட்சிகள் அணிவகுத்து
அழகாய் நடப்பதைப் பாருங்கள்!
சருகுக் கப்பலின் மீதமர்ந்து
சண்டைசெய் எறும்பினைப் பாருங்கள்!
உருகிப் போனக் குரங்கெல்லாம் 
உற்றுப் பறப்பதைப் பாருங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com