தெரியுமா?

அமெரிக்க நகை,  கைக்கடிகார நிறுவனம் ஒன்று உலகின் மிக உயர்ந்த கைக்கடிகாரத்தைத் தயாரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்க நகை, கைக்கடிகார நிறுவனம் ஒன்று உலகின் மிக உயர்ந்த கைக்கடிகாரத்தைத் தயாரித்துள்ளது. இதன் விலை ரூ.164 கோடி (20 மில்லியன் டாலர்). 216.89 காரட் எடை கொண்ட வைரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை தயாரிக்க அந்த நிறுவனத்துக்கு மூன்றரை ஆண்டுகள் ஆயின.

ஒருகாலத்தில் "சாக்லெட்' ரூபாய் நோட்டாகப் பயன்படுத்தப்பட்டது. மாயன் இன அரசர்கள் மக்கள் கட்ட வேண்டிய வரிப்பணத்தை துணியாகவும், கோக்கோ (சாக்லெட்டில் பயன்படுத்துவது) விதைகளாகவும் வசூலித்துள்ளனர்.

பிரபல கார்ட்டூன் டாம் அன்டு ஜெர்ரியில் வரும் பூனையின் பெயர் "டாம்'. எலியின் பெயர் "ஜெர்ரி'. இந்த கார்ட்டூன்களை படைத்த ஜோசப் பார்பரா, வில்லியன் ஹன்னா ஆகியோர் இந்த பூனைக்கும் எலிக்கும் இட்ட பெயர்கள் என்ன தெரியுமா? "ஜாஸ்பர்', "ஜிங்ஸ்'.

1973-ஆம் ஆண்டு ஏப். 3ஆம் தேதி செல்போனின் முதல் பேச்சு நடைபெற்றது. பேசியவர் "மோட்டாரோலா' செல் நிறுவனத்தின் அன்றைய பொறியாளராக இருந்த "மார்டின் கூப்பர்'. ஆனால் கண்டுபிடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்தே, 1983இல் செல்போன் விற்பனைக்கு வந்தது. செல்போனில் இருந்து முதல் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டது 1992ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதிதான்!

பிரபலமான செல்போன் செயலியான "வாட்ஸ் ஆஃப்' தொடங்கப்பட்டது 2009ஆம் ஆண்டில்தான்.

2001ஆம் ஆண்டில் பிரபலமான 3ஜி சேவையை ஜப்பான் நாடு பயன்படுத்தியது. ஆனால், 2009இல் "ஸ்டாக் ஹோம்' 4 ஜியை பயன்படுத்திய முதல் நாடானது. 2019இல் தென் கொரியா 5ஜியை பயன்படுத்திய முதல் நாடு.

பிரபல ஓவியர் லியோனார்டோடா வின்ஸி (மோனாலிசா புகழ்) வரைந்த இயேசுநாதரின் ஓவியம், பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் வரைந்தது என்று உறுதி செய்யப்பட்டது. 2011இல் "லியானார்டோ'வின் ஓவியக் கண்காட்சியில் சேர்க்கப்பட்டது. பின்னர், 2019இல் ஏலத்தில் 450.30 மில்லியன் டாலருக்கு (ரூ.1,600 கோடிக்கு) விலை போனது. உலகில் வேறு எந்த ஓவியத்துக்கும் இந்த விலை கொடுக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com