விடுகதைகள்

1.  விழுந்தால் படுக்காது.  எழுந்தால் நிற்காது.
2. மாவில் பழுத்த பழம்.   மக்கள் யாவரும் விரும்பும் பழம்.  'ழ'தான் வித்தியாசம்.
3. முதுகு மேல் கூடு முத்தம்மாளுக்கு அது வீடு.
4. மட்டையுண்டு, கட்டையில்லை. பூவுண்டு,மணமில்லை.
5. பெயருக்குத்தான் புலி.   உருவம் இல்லை, செயலும் இல்லை.
6. ஏழுமலைக்கு அந்தப் பக்கம், எருமைக்கடா கத்துது.
7. விடிய விடிய பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறும்தோட்டம்.
8.  சித்தூர் சிறுமணலிலே காய்க்கும் கத்திரிக்காய், கூட்டிப் பார்த்தால் கொம்புக்கு முப்பது காய்.
9. அத்துவானக் காட்டுக்குள்ளே குடை பிடிக்கும் அய்யா.

விடைகள்: 1. தஞ்சாவூர் பொம்மை,   2. அப்பளம்,   3. நத்தை,  4. வாழை,  5.  அம்புலி,  6.  இடியோசை,  7. நட்சத்திரங்கள்,  8. காப்பிச் செடி 
(காப்பிக்காய்கள்), 9. காளான்.


பொருத்துக...
தமிழ் மாதங்களும் அவற்றில் வரும் முக்கிய விழாக்களும் இடம் மாறி உள்ளன.  சரியாகப் பொருத்துங்களேன்?
    1. சித்திரை    -     மகம்
    2. வைகாசி    -     பொங்கல்
    3. ஆடி        -     பௌர்ணமி
    4. தை        -     அவிட்டம்
    5. மார்கழி    -     தீபம்
    6. ஆவணி    -     விசாகம்
    7. கார்த்திகை    -     பெருக்கு
    8. மாசி        -     ஏகாதசி


விடைகள்:
1. பௌர்ணமி 2. விசாகம் 3. பெருக்கு 4. பொங்கல் 5. ஏகாதசி
6. அவிட்டம் 7. தீபம் 8. மகம்

பொன்மொழிகள்...

* உழைப்பில் காளையாக இரு! தன்மானத்தில் கவரிமானாக இரு.
*சிக்கனமும் ஒரு வித வருமானமே.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

*ஒரு சொல் போதும் என்றால் இரு சொற்களை செலவு செய்யாதே! எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும் விரையமாக்காதே!
*தீவிரவாதம் நாட்டுக்கு ஆகாது. தீவிர விவாதம் நட்புக்கு ஆகாது.
*இடம் அறிந்து சிரிப்பவன் புத்திசாலி. தெரிந்து சிரிப்பவன் நடிகன்.

-ஜி.அர்ச்சுனன், செங்கல்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com