

இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி.ராமன் தனது ஆய்வகப் பணிக்கு ஆள் அமர்த்த பட்டதாரிகளிடம் நேர்காணல் நடத்தினார். இதில் பங்கேற்ற இளைஞனால் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. உடனே அவர், "தம்பி. இந்த வேலைக்கு ஏற்ற இயற்பியல் அறிவை வளர்க்க முயற்சி செய். வெற்றி கிடைக்கும்' என்று அனுப்பிவைத்தார்.
வேலை கிடைக்தாத கவலையோடு அந்த இளைஞன் தரையை நோக்கிக் குனிந்த
படியே வெளியேறும்போது, ஒரு குண்டூசி தரையில் இருந்ததைப் பார்த்தான். உடனே அதை குனிந்து எடுத்து சர் சி.வி.ராமனின் மேஜை மீது இருந்த குண்டூசி டப்பாவில் போட்டுவிட்டு சோகத்துடன் வெளியேறி சென்றான்.
இந்தச் செயலைப் பார்த்த சர்.சி.வி.ராமன் இளைஞனை அழைத்து, "உன்னை நான் வேலைக்கு அமர்த்திக் கொண்டேன்'' என்றார். ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞரை நோக்கிய சர். சி.வி.ராமன் கூறுகையில்," தம்பி..
இயற்பியலை நான் எப்போதும் கற்றுத் தர முடியும். ஆனால், பொறுப்புணர்ச்சி உன்னிடம் இருக்கிறது. உனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வெளியேறும்போது, தரையில் கிடந்த குண்டூசியை நீ அலட்சியம் செய்யவில்லை. இதுதான் பொறுப்புணர்ச்சி. அதுவே உனக்கு வேலையைப் பெற்றுத் தந்தது'' என்றார்.
இளைஞனின் முகத்தில் சந்தோஷம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.