தெரியுமா?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள "சில்வர் லேக்' எனும் வட்ட வடிவமான ஏரி, இயற்கையாகவே உருவானது.   90 மீட்டர் ஆழமுள்ளது. ஏரியின் ஒரு கரைக்கும் மற்றொரு கரைக்கும் உள்ள சுற்றளவு 8.8 கி.மீ. ஆகும
தெரியுமா?


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள "சில்வர் லேக்' எனும் வட்ட வடிவமான ஏரி, இயற்கையாகவே உருவானது.   90 மீட்டர் ஆழமுள்ளது. ஏரியின் ஒரு கரைக்கும் மற்றொரு கரைக்கும் உள்ள சுற்றளவு 8.8 கி.மீ. ஆகும். 

தென் ஆப்பிரிக்காவில் அதிக அளவில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன.  இன்று உலகில் புழக்கத்தில் உள்ள தங்கத்தில் 50 சதவீதம் இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டவையாகும். 1970ஆம் ஆண்டில் 1,480 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது. இது அந்த ஆண்டின் உலகின் மொத்த உற்பத்தியில் 79 சதவீதமாகும். 2014ஆம் ஆண்டில் புவிக்கு அடியில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 600 டன் தங்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இது 6.3 டிரில்லியன் அமெரிக்க டாலர். 1905ஆம் ஆண்டு முதல் தங்க உற்பத்தியில் முன்னணி பெற்று விளங்கிய தென் ஆப்பிரிக்காவை 2007ஆம் ஆண்டில் சீனா பின்னுக்கு தள்ளியது. அந்த ஆண்டில் சீனாவில் 276 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது.

தங்கம் அதிக அளவில் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, ரஷியா, கனடா, பெரு, கானா, மாலி, புர்கினாபாசோ, இந்தோனேஷியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.  

2019-20ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து 1,742 கிலோ தங்கம் தோண்டி எடுக்கப்பட்டது.  இது 2022-23ஆம் ஆண்டில் 1,251 கிலோவாக குறைந்துவிட்டது.

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட கோலார் தங்க வயல் தங்க சுரங்கத்தில் இருப்பு வெகுவாகக் குறைந்ததால், 2001இல் மூடப்பட்டது. இதே மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி சுரங்கம்தான் நாட்டிலேயே பெரிய தங்கச் சுரங்கமாகும்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ்வாட் என்பவர் நீராவி என்ஜினை 1765ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.  பெட்ரோல் கம்ப்ரஷன் என்ஜினை ஜெர்மனைச் சேர்ந்த காட்லிப் டாமியர், கார்ல் பென்ஸ் ஆகியோர் 1885ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனர்.

டீசல் என்ஜினை ஜெர்மனியின் ரூடால்ஃப் 1897இல் கண்டுபிடித்தார். பிரிட்டனின் ஜான்டன்லப் 1895ஆம் ஆண்டில் சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தார். ஆன்ட்ரீ மிசலின் மோட்டார் வாகனங்களுக்கான டயரை கண்டுபிடித்தும், அவரால் முழு வெற்றி பெற முடியவில்லை.

ஃபிலிப்ஸ்டாராஸ் என்பவர் 1911ஆம் ஆண்டில் காற்று அடைக்கப்பட்ட ரப்பர் குழாயுடன் கூடிய நவீன டயரை உருவாக்கினார். 

சைக்கிள் பயன்பாடு 1817ஆம் ஆண்டுக்கு முன்பே தொடங்கியது. நவீன சைக்கிளை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மாக் மில்லன் 1840ஆம் ஆண்டில் கண்டறிந்தார். 

1868ஆம் ஆண்டு சைக்கிளில் எடை குறைந்த உலோகச் சக்கரங்களும், ரப்பர் டயர்களும் பொருத்தப்பட்டன.  இன்றைய சைக்கிள் 1885ஆம் ஆண்டு மாக் மில்லன் என்பவர் கண்டறிந்தார்.

மோட்டார் சைக்கிளை பிரிட்டனின் எட்வர் பட்லர் 1848இல் கண்டறிந்தார். மோட்டார் ஸ்கூட்டரை பிரிட்டனைச் சேர்ந்த  கிரிவில்லே பிரட்ஷா என்பவர் 1919ஆம் ஆண்டில் கண்டறிந்தார். சூரிய ஒளியால் இயங்கும் சோலார் பேட்டரியை ஜெராஸல்டு பியர்ஸன், கால்வின் ஃபல்லர், டாரில் சாபின் ஆகியோர் 1954ஆம் ஆண்டில் கண்டறிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com