நல்லவை பழகிடு!
By நா.கிருஷ்ணமூர்த்தி | Published On : 09th April 2023 12:00 AM | Last Updated : 09th April 2023 12:00 AM | அ+அ அ- |

விடியற்காலையில் எழுந்திரு
விடியும்வரை படித்திரு!
உதய நேரத்தில் குளித்திடு
உடல் சோர்வைப் போக்கிடு!
சூரிய ஒளியில் நின்றிடு
"வைட்டமின் டி'யைப் பெற்றிடு!
சத்தான காய்கனியைச் சாப்பிடு
பாலை தினமும் பருகிடு!
மாலை வெயிலில் குதித்திடு
மகிழ்ச்சிக் கடலில் திளைத்திடு!
விரைவாய் பாடங்களை எழுதிடு
அளவாய் உண்டு உறங்கிடு!