ஏடிஎம்  உருவானது எப்படி?

பணத்தை எப்போது வேண்டுமானாலும், ஏடிஎம் வாயிலாகப் பெறுகிறோம்.  இது  உருவான வரலாறு தெரியுமா?
ஏடிஎம்  உருவானது எப்படி?
Updated on
1 min read

பணத்தை எப்போது வேண்டுமானாலும், ஏடிஎம் வாயிலாகப் பெறுகிறோம். இது உருவான வரலாறு தெரியுமா?

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன். இவர் தனது மனைவியின் பிறந்த நாளையொட்டி, "பரிசு வாங்க வேண்டும்' என்று தீர்மானித்து வங்கியிலிருந்து பணம் பெறச் சென்றார். நீண்ட வரிசையில் நின்ற ஜான் காசாளரிடம் சென்றபோது "வங்கி நேரம் முடிந்துவிட்டது' என்று கவுன்ட்டரை மூடிவிட்டு சென்றுவிட்டார். ஜானுக்குப் பெரிதும் ஏமாற்றம்.
கையில் இருந்த கொஞ்சம் பணத்துக்குத் தானியங்கி இயந்திரத்திலிருந்து மிட்டாய்கள் வாங்கிக் கொண்டு வீடு சென்றார். ஆனாலும், மனைவி ஆச்சரியப்படும்படியான பரிசு பொருள் வாங்க வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஜானை வதைத்தது. 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் மெஷினிலிருந்து பணத்தை எடுக்கலாமே? என்று யோசனையில் ஆழ்ந்தார். சில மாதங்களில் வெற்றியும் பெற்றார்.
ஜான் உருவாக்கிய பணம் வழங்கும் தானியங்கி இயந்திரம் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. 1967-இல் பார்க்லேஸ் வங்கியின் கிளையில் உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
ஆனால் அதிலும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. பணம் எடுக்க பயன்படுத்தும் அட்டையின் ரகசிய என்னை ஆறு இலக்க எண்ணாக ஜான் உருவாக்கியிருந்தார். ஜானின் மனைவிக்கு அந்த ஆறு இலக்க ரகசிய எண்ணை நினைவில் வைத்த்துக் கொள்ள முடியவில்லை. யோசித்து ஆறு இலக்க ரகசிய எண்ணை நாலு இலக்க எண்ணாகக் குறைத்தார்.
அதற்குப் பிறகு அநேக மாற்றங்கள் வந்துவிட்டாலும், ஏடிஎம் மெஷினுக்கு அச்சாரம் போட்டவர் ஜான்.
அவர் தனது 84 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
1988ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏடிஎம் அறிமுகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com