வங்கத்தில் தமிழ் நூலகங்கள்...
By முக்கிமலை நஞ்சன் | Published On : 23rd April 2023 12:00 AM | Last Updated : 23rd April 2023 12:00 AM | அ+அ அ- |

நாட்டிலேயே மிகப் பெரிய நூலகம் கொல்கத்தா தேசிய நூலகம். இங்கு தமிழில் வெளிவந்துள்ல பெரும்பாலான நூல்கள் உள்ளன. வேறு எங்கும் கிடைக்காத அரிய நூல்கள், சுவடிகள், கையெழுத்துப் படிகள், நூலாசிரியர் கையெழுத்துடன் கூடிய நூல்கள், பெரும்பாலும் முதல் பதிப்புகள் இங்கு உள்ளன.
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையால் அரிதாகச் சேகரித்துவைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் நூல்களை அவர்களது குடும்பத்தினர் இந்த நூலகத்துக்கு அளித்துள்ளனர்.
ரவீந்திரநாத் தாகூர் சாந்தி நிகேதனத்தில் அமைத்த "விஸ்வபாரதி' பல்கலைக்கழகத்தில் சிறந்த தமிழ் நூல் நிலையம் உள்ளது. இதற்கு நிறைய நூல்களை ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அனுப்பிவைத்துள்ளார்.