ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!

பயனாய் வாழ்வைக் கழித்திடு- தம்பிபயத்தைப் போக்கி வளர்ந்திடு!நயமாய்ப் பேசக் கற்றிடு- தம்பிநன்மைகள் செய்ய எண்ணிடு!
ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!
Updated on
1 min read

பயனாய் வாழ்வைக் கழித்திடு- தம்பி
பயத்தைப் போக்கி வளர்ந்திடு!
நயமாய்ப் பேசக் கற்றிடு- தம்பி
நன்மைகள் செய்ய எண்ணிடு!

காலம் போற்றி வாழ்ந்திடு- தம்பி
கனிவுடன் நாளும் திகழ்ந்திடு
ஞாலம் போற்ற உயர்ந்திடு- தம்பி
ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!

அன்பைத் தூவி விதைத்திடு- தம்பி
அறிவைப் பெற்று மகிழ்ந்திடு
பண்பை வளர்த்து கொண்டிரு- தம்பி
பாரை உயர்த்தத் துடித்திடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com