

கேள்வி:கால இயந்திரத்தில் பயணித்து கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் செல்வது போல, திரைப்படங்களிலும் கதைகளிலும் இருக்கின்றனவே? இது சாத்தியமா?
பதில்:உலகில் பல விஞ்ஞானிகள் இந்த வகை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, கால இயந்திரத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், இது சாத்தியமாகுமா என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
உங்களுக்குப் பத்து வயது என்றால் உங்களது 2-வது வயதுக்கு நீங்கள் கால இயந்திரம் மூலம் செல்வது என்பது சாத்தியமில்லையாம். ஏனெனில் கடந்த காலத்தை நீங்கள் முடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறீர்கள் அல்லவா? மீண்டும் அந்தக் காலத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் உங்கள் வயது 2-ஆக இருக்க வேண்டும். ஆனால், 10 வயது ஆன உங்களால் எப்படி 2-வது வயதுக்குச் செல்ல இயலும். நன்றாக யோசித்துப் பாருங்கள். இதுதான் சிக்கல்.
எதிர்காலத்துக்குச் செல்வதிலும் இதே போன்ற சிக்கல் இருக்கிறது. நீங்கள் உங்களது 10-வது வயதில் கால இயந்திரத்தில் பயணம் செய்து 2070-ஆம் ஆண்டுக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிவேகமாகப் பயணித்தாலும் அதற்கு 5 ஆண்டுகள் ஆகுமாம். அப்படியே நீங்கள் 2070-ஆம் ஆண்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், உங்கள் நண்பர்களின் வயது ஏறத்தாழ 60 ஆகியிருக்குமாம். அதாவது அவர்கள் உங்களை விட மிகவும் வயதானவர்களாக ஆகியிருப்பார்கள்.
ஆகவே, திரைப்படங்களைப் பார்த்துவிட்டு கொஞ்ச நேரத்துக்கு ஆச்சரியப்பட்டு, சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.