பொருள் அறிந்து கற்போம்...

வேற்றுமை விளக்கும் வார்த்தைகள்: அறிவின் அழகை உணர்ந்து வெற்றிக்கு வழி நடைபோடுவோம்!
பொருள் அறிந்து கற்போம்...

அரண் என்றால் மதிலாம்- தம்பி

அரன் என்றால் சிவனாம்

ஊண் என்றால் உணவாம்- தம்பி

ஊன் என்றால் இறைச்சியாம்!

துணி என்றால் துணிதலாம்- தம்பி

துனி என்றால் துன்பமாம்

தணி என்றால் அடங்கலாம் - தம்பி

தனி என்றால் தனிமையாம்!

கணம் என்றால் நேரமாம்- தம்பி

கனம் என்றால் பளுவாம்!

திணை என்றால் ஒழுக்கமாம்- தம்பி

தினை என்றால் தானியமாம்!

திண்மை என்றால் வலிமையாம்- தம்பி

தின்மை என்றால் தீமையாம்

வேற்றுமையை அறிந்து படி- தம்பி

நீ வெற்றிநடை போடலாம் தம்பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com