எரிமலைகள்

மவுனாலோவா: உலகின் மிகப் பெரிய எரிமலை
எரிமலைகள்

புவியில் உள்ள எரிமலைகளில் மிகப் பெரியது ஹவாய் தீவில் உள்ள "மவுனாலோவா' ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. உயரம் கொண்டது. 42,500 கன சதுர மீட்டர் அளவுள்ளது.

எரிமலை வெடிப்பால் நிலநடுக்கம், நிலச்சரிவு, பாறைகள் வீழ்ச்சி, பெரும் காட்டுத் தீ, சுனாமி போன்ற வேறு பல இயற்கைப் பேரழிவுகள் ஏற்படக் கூடும்.

அடிக்கடி சீறும் தீவிரமான எரிமலையானது அமெரிக்காவின் மேற்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மௌன்ட் செயின்ட் ஹெலன்ஸ் ஆகும்.

ஜப்பான், ரஷியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் சீறும் எரிமலைகள் உள்ளன.

புவியில் மட்டுமின்றி, செவ்வாய் போன்ற பிற கிரகங்களிலும் எரிமலைகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எரிமலை நெருப்பைக் கக்கத் தொடங்குவது என்பது அமைதியாகவோ, பெரும் சத்தத்துடன் கூடிய வெடிப்பாகவோ நிகழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com