கேப்பர் மலை சிறை வரலாறு...

கேப்பர் மலைச் சிறைச்சாலையின் பரந்த வரலாறு
கேப்பர் மலை சிறை வரலாறு...

கடலூர் கேப்பர் மலை மத்தியச் சிறை, தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பெரியதும், பிரபலமானதும் ஆகும். 1865-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ராணுவத் தளபதி பிரான்சிஸ் கேப்பரால் உருவாக்கப்பட்டது. சுமார் 180 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திறந்தவெளிச் சிறை மிகவும் பரந்து விரிந்தது.

நாட்டில் நெருக்கடிக் காலத்தில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இங்கு சிறைவைக்கப்பட்டிருந்தனர். இங்கு ஆயிரம் பேரை சிறைவைப்பதற்கான இடவசதிகள் உள்ளன.

வண்டிப்பாளையம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் செம்மண் குன்றுகளும், முந்திரிக்காடுகளும் அழகிய நீர் ஊற்றுகளும் நிறைந்த இடம். ஆங்கிலேயர் நினைவான கேப்பர்மலை சிறைச்சாலை என்றே அழைக்கப்படுகிறது.

கடலூர்- சிதம்பரம் ரயில் பாதையில் இந்த இடம் உள்ளது. செம்மண் குன்றுகள் அதிகமாக இருப்பதால், கேப்பர் குவாரி என்ற பெயரில் சிறிய ரயில் நிலையமும் அருகில் போக்குவரத்து உள்ளன.

இந்த வண்டிப்பாளையம் பிற்காலத்தில் பண்டிதர் பாளையம் என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. காரணம் என்ன தெரியுமா? பெரும்புலவர் நடேச முதலியார், புலவர் சுந்தர சண்முகனார் போன்ற தமிழ்ப் பண்டிதர்கள் பலரும் நாட்டு வைத்தியர்கள், ஜோதிடர்கள் சிலரும் இங்கு வாழ்ந்ததால் இந்தப் பெயரும் ஏற்பட்டது.

- மு.பாஸ்கரன், நூலகர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com