தெரியுமா?

பால்பெக்: ரோமப் பேரரசின் பிரமாண்ட கோயில் நகரம்
தெரியுமா?

ரோமப் பேரரசின் பொற்காலத்தில் புகழ்பெற்ற கோயில் நகரமாக இருந்த பால்பெக்கில், ஜூபிடர் கடவுளின் பிரமாண்ட கோயில் இருந்தது. ரோமப் பேரரசு வீழ்ந்தபோது, பால்பெக் இன்று சிறிய கிராமமாக மாறி லெபனான் நாட்டில் உள்ளது. இந்தக் கோயிலில் மிச்சமிருப்பது ஆறு தூண்கள்தான் என்றாலும், இதைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்,.

கனடா நாட்டில் புதுமையான பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இங்கு யு.வி. வெளிச்சத்தில் ஒளிரும் சிறப்பு காகிதங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதனால், அந்த விளக்கு ஒளியில் பாஸ்போர்ட் பக்கங்கள் அழகான ஓவியங்களாக ஒளிர்கின்றன.

பிரம்மபுத்திரா நதிக்கு சீனாவில் அழைக்கப்படும் பெயர்- டிசாங்கோ.

கென்யா நாட்டின் ஆரம்பக் காலப் பெயர் - மலிந்தி.

ஜப்பானியர்கள் இடது கைப் பழக்கம் உள்ளவர்களை "இகாரி' என்று அழைக்கின்றனர்.

பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம் "ஜெப்ளின்' என்று அழைக்கப்படும்.

நேபாள நாடாளுமன்றத்தின் பெயர் - பஞ்சாயத்து.

மஞ்சள் கருப்புப் புலி, வெள்ளை கருப்புப் புலி என்று புலி இனத்தில் இரு வகைகள் உள்ளதுபோன்று, காண்டாமிருகத்தில் கொம்புகளில்தான் நிற மாற்றம் இருக்கிறது. இந்தியக் காண்டாமிருகத்துக்கு ஒற்றை கொம்பும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள காண்டாமிருகத்துக்கு இரட்டை கொம்புகளும் உள்ளன.

வியத்நாம் நாட்டில் தங்கத்திலேயே ஹோட்டல் கட்டியுள்ளனர். குளியல் அறை, மின்விசிறிகள், குளியல் தொட்டி, ஜன்னல்- கதவுகள், சில இடங்களில் தரைப் பகுதி உள்பட எல்லா இடங்களிலும் 24 கேரட் தங்கத்தைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.

உலகில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் முதலிடத்தை சீனாவும், இரண்டாம் இடத்தை இந்தியாவும் வகிக்கின்றன.

மாங்காயின் தாயகம் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசிய நாடுகள்தான்.

குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ராவில் உலகின் மிகப் பெரிய தாமிர உற்பத்தி ஆலை அமையவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com