புவியியல் அம்சங்கள், வரலாற்று நிகழ்வுகள், கலாசாரப் பண்புகளை வைத்து நாடுகளுக்குப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. சில நாடுகளுக்குப் பட்டப் பெயர்களும் உண்டு. அது ஏன் தெரியுமா? உதாரணத்துக்கு சில நாடுகள் குறித்த விவரங்களை அறிவோம்.
ஜப்பான் (சூரியனின் நிலம்):
சீனாவில் இருந்து பார்க்கும்போது, சூரியன் ஜப்பானில் உதிப்பதுபோன்று தோன்றும். இதனால் ஜப்பான் "உதயசூரியனின் நாடு' என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானின் பெயர் "நிப்பான்' என்று அர்த்தம். இதற்கு "சூரியனின் ஆதாரம்' என்பதாகும்.
பின்லாந்து (ஆயிரம் ஏரிகளின் நிலம்):
பின்லாந்து நாட்டின் நிலப் பரப்பின் முக்கிய அம்சமே ஏராளமான ஏரிகள்தான். "ஆயிரம் ஏரிகளின் நிலம்' என்பதற்காக, இவ்வாறு சொல்கிறார்கள்.
தாய்லாந்து (புன்னகையின் நிலம்):
தாய்லாந்து மக்கள் நட்பு, விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள். இதனால் "புன்னகையின் நிலம்' என்கின்றனர்.
அயர்லாந்து (எமரால்டு தீவு):
அயர்லாந்து நாட்டின் பசுமையான கிராமப்புறங்கள், அசப்பில் மரகதத்தின் ஜொலிப்பை வெளிப்படுத்துகின்றன.
ஐஸ்லாந்து (தீ, பனி நிலம்):
தீயைக் கக்கும் எரிமலைகள், பனிப்பாறைகளைக் கொண்ட தனித்துவமான நாடு. ஆகவே, "தீ, பனி நிலம்' என்று அழைக்கின்றனர்.
தென்ஆப்பிரிக்கா (ரெயின்போ நேஷன்)
நாட்டின் பல கலாசாரப் பன்முகத் தன்மைக் கொண்டதால், "ரெயின்நேஷன்' என்று அழைக்கப்படுகிறது.
எகிப்து (பார்வோன்களின் நிலம்)
பண்டைய நாகரிகம், அதன் புகழ் பெற்ற ஆட்சியாளர்களான பாரோக்களைக் குறிக்கிறது.
சீனா (சிவப்பு டிராகன்)
சீன கலாசாரங்களில், புராணங்களில் முக்கியமான சின்னங்களாக டிராகனைப் பார்க்கலாம். அதனால் இதற்கு இப்படி பெயர்.
பிரான்ஸ் (அறுகோணம்):
வரைபடத்தில் பிரான்ஸின் எல்லைகளை நோக்கினால் அவை அறுகோண அமைப்பில் இருக்கும்.