

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் நகரில் இரவில் ஒளிவிடும் நியான் விளக்குகள் கிடையாது.
ஹாங்காங் நகரில் பார்வையற்றோர் மட்டும் பிச்சை எடுக்க அனுமதி உண்டு. மற்றவர்கள் பிச்சை எடுத்தால் தண்டனை உண்டு.
திபெத்தியர்களின் மரபுப்படி யாரும் மூக்குக் கண்ணாடி அணியக் கூடாது. அவசியம் ஏற்பட்டால், லாமாக்களின் அனுமதி பெற்றே அணிய வேண்டும்.
உடுப்பி நகரில் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் வரும்போது, கோயில் யானைகள் சுவாமிகளைப் பார்த்தவாறு பின்னோக்கியே நடந்து செல்கின்றன.
ஒரிஸா அசோகர் தொடர்புடைய மாநிலமாகும். இங்கு மூன்று ஊர்களில் புத்த மதத்தினர் மட்டுமே வாழ்கின்றனர். இதுபோன்ற சூழல் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.
ராஜஸ்தானில் விதவைகள் கருப்புச் சேலையை உடுத்துகின்றனர். சுமங்கலிகள் வெள்ளைச் சேலையை உடுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.