அப்புறம் நானும் திருடன்தான்!

வேலு நாச்சியாரின் தலைமை அமைச்சரான மருதிருவர் குடிலில் நடந்தது கீழ்கண்ட நிகழ்ச்சி.

வேலு நாச்சியாரின் தலைமை அமைச்சரான மருதிருவர் குடிலில் நடந்தது கீழ்கண்ட நிகழ்ச்சி.
ஏழைகளுக்கு அளிப்பதற்காக, சிவகங்கை ராணி அனுப்பியிருந்த சேலைகள், கம்பளங்கள், உணவுத் தானியங்கள், கால்நடைகள் போன்றவை குடிசையைச் சுற்றி குவிந்து கிடந்தன.
இதையறிந்த திருடர்கள் சிலர் நடுஇரவில் அங்கே நுழைந்தனர். அவர்கள் தரையில் பாய் விரித்து வைத்திருந்த பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டு மருதிருவர் தூங்கிக் கொண்டிருந்ததைதான் பார்த்தனர்.
சின்ன மருதுவின் காலைப் பிடித்த திருடர்கள் அவரை எழுப்பி, ""ஐயா மன்னித்து விடுங்கள். நாங்கள் ராணியார் மக்களுக்குக் கொடுத்த பொருள்களை இங்கிருந்து திருடிச் செல்ல வந்தவர்கள்தான். கடுமையான குளிரில் கிழிந்த கம்பளியை இருவர் போர்த்திக் கொண்டு தூங்குவது ஏன்?'' என்று கேட்டனர்.
அவர்களைப் பார்த்து புன்னகைத்த சின்ன மருது, ""நண்பனே! இந்தக் கிழிசல் கண்பளி கூட இல்லாத ஏழைகளுக்காக வந்த கம்பளிகள் இவை. அவர்கள்தான் இவைகளுக்கு உரியவர்கள். இவைகளை எடுத்து போர்த்திக் கொண்டால் என்னையும் திருடன் என்றுதான் சொல்ல வேண்டும்'' என்றார்.
இதைக் கேட்டதும் சின்ன மருதுவிடம் திருடவர்கள் மன்னிப்பு கேட்டு, ""இனிமேல் திருடுவதே இல்லை'' என்று உறுதி எடுத்துகொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com